17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அந்த ஆலயம், 1821ம் ஆண்டு வரை, அதாவது கொலம்பிய அரசு, பானமாவில் அநேக துறவு இல்லங்களைத் தடை செய்த காலத்தில், பிரான்சிஸ்கன் சபையினருக்கு உரியதாக இருந்தது. பானமா சுதந்திரம் அடைந்த பின்னர், இந்த ஆலயம் அரசுக்குரியதாக மாறியது. தென் அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்தில், 1826ம் ஆண்டில், இந்த ஆலயத்தில்தான், சைமன் பொலிவார் அவர்கள் மாநாடு ஒன்றை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பானமா நகர், புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இலத்தீன் அமெரிக்க ஆயர்களைச் சந்தித்து, நீண்ட உரை ஒன்றும் ஆற்றினார். புனித ஆஸ்கர் ரொமேரோ அவர்களை, இலத்தீன் அமெரிக்க ஆயர்களுக்கு எடுத்துக்காட்டாக உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Source: New feed