
மெசியா’வாகிய மானிட மகன் பாடுகள் பட வேண்டும்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 27-33
அக்காலத்தில் இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
வழியில் அவர் தம் சீடரை நோக்கி, “நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள் அவரிடம், “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர்” என்றார்கள். “ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர் அவர்களைக் கேட்க, பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா” என்று உரைத்தார்.
தம்மைப்பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.
“மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும்” என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார். இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சொன்னார்.
பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டார்.
ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்துப் பேதுருவிடம், “என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்” என்று கடிந்துகொண்டார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————
வியாழக்கிழமை
தொடக்க நூல் 9: 1-13
“ஒரு மனிதரின் இரத்தத்தை எவர் சிந்துகிறாரோ
அவரது இரத்தம் வேறொரு மனிதரால் சிந்தப்படும்”
நிகழ்வு
2017 ஆம் ஆண்டு, ஜூன் மாதம், 22 ஆம் நாளன்று வெளிவந்த புதிய தலைமுறை இணைய நாழிதளில் (EPaper) வெளிவந்த நிகழ்வு இது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், அலிகார் மாவட்டத்திலுள்ள ஒரு வனப்பகுதியில் நிரஞ்சன் என்ற இளைஞன் ஏழு வயதுச் சிறுமையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுபோட்டான். விஷயம் அறிந்த பொதுமக்கள் அவனைப் பிடித்து அடித்துத் துவைத்தார்கள். மக்கள் அடித்த அடியில் அவன் இறந்தே விட்டான். இச்சம்பவம் அந்நாட்களில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஓர் உயிரை எடுப்பவருக்கு இதுபோன்றே தண்டனைகள் கொடுக்கப்பட்டால்தான் குற்றங்கள் குறையும் என்றும் பேசப்பட்டது.
மேலே சொல்லப்பட்ட நிகழ்வு, இன்றைய முதல் வாசகத்தில் வரும் ‘ஒரு மனிதரின் இரத்தத்தை எவர் சிந்துகிறாரோ அவரது இரத்தம் வேறொரு மனிதரால் சிந்தப்படும்’ என்ற இறைவார்த்தையோடு ஒத்துப் போவதாக இருக்கின்றது. எனவே, இந்த இறைவார்த்தையின் வழியாக இறைவன் நமக்கு என்ன செய்தியைச் சொல்கிறார் என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.
ஆண்டவராக கடவுள் நோவாவோடு செய்துகொண்ட உடன்படிக்கை
மக்கள் செய்த பாவத்தினால் மண்ணுலகில் தீமை பெருகியதால் சினமுற்ற கடவுள், அவர்களை அழிக்க மண்ணுலகில் வெள்ளப்பெருக்கை உண்டாக்கினார். இதனால் நாற்பது இரவும் நாற்பது பகலும் பெய்த தொடர்மழையினால் மண்ணுலகில் இருந்த எல்லா உயிரினமும் எல்லா மனிதர்களும் அழிந்துபோகிறார்கள். இதற்குப்பின் வெள்ளம் வடிந்தபின்பு, பேழையிலிருந்து வெளிவந்த நோவாவோடு கடவுள் உடன்படிக்கை செய்துகொள்கின்றார். அந்த உடன்படிக்கையில் இடம்பெறும் ஒரு முக்கியமான கூறுதான் ‘ஒரு மனிதரின் இரத்தத்தை எவர் சிந்துகிறாரோ, அவரது இரத்தம் வேறொரு மனிதரால் சிந்தப்படும்’ என்பதாகும்.
வாழ்வு என்பது கடவுள் கொடுத்த கொடை
நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த வாழ்வானது கடவுள் கொடுத்த கொடை. எனவே, இந்த வாழ்வென்னும் கொடையைப் பறிப்பதற்கு கடவுளைத் தவிர வேறு எவருக்கும் உரிமை. அவருக்குத்தான் எல்லா அதிகாரமும் இருக்கின்றது. அதனால்தான் காயினால் ஆபேல் கொல்லப்பட்டபோது, “நீ என்ன செய்துவிட்டாய்! உன் சகோதரனின் இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து என்னை நோக்கிக் கதறிக் கொண்டிருக்கிறது… ஆதலால் மண்ணுலகில் நீ நாடோடியாய் அலைந்து திரிவாய்” என்கின்றார் கடவுள் (தொநூ 4: 10-12). இதன்மூலம் நாம் உயிரின் மதிப்பை உணர்ந்து கொள்வதும் நமக்குக் கொடுக்கப்பட்ட இந்த வாழ்வினை அர்த்தமுள்ளதாக்குவதும் தேவையான ஒன்றாக இருக்கின்றது.
மனிதர்கள் கடவுளின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்டவர்கள்
ஆண்டவராகிய கடவுள் மேற்சொன்ன வார்த்தைகளை உதிர்ப்பதற்கு இன்னொரு காரணம், கடவுள் மானிடரைப் படைத்தபோது, தம் உருவிலும் சாயலிலும் படைத்தார் (தொநூ1:26). இதன்மூலம் கடவுள் ஒவ்வொருவரிலும் குடிகொண்டிருக்கின்றார் என்பது உண்மையாகின்றது. இதனை எண்பிக்கின்ற வகையில், பவுலடியார் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் இடம்பெறும் வார்த்தைகள் இருக்கின்றன. “நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்ககளில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார்” என்கிறார் பவுலடியார் (1 கொரி 3: 16-17). ஆகவே, ஒவ்வொருவரிலும் கடவுள் குடிகொண்டிருக்கின்றார் என்பதை உணர்ந்து, அவருக்குத் தகுந்த மதிப்பளித்து, அவருக்கு எந்தவொரு தீமையும் செய்யாமல் இருப்பது நல்லது.
தண்டிப்பது கடவுளின் நோக்கம் கிடையாது, திருந்தி நடக்கவேண்டும் என்பதுதான் கடவுளின் நோக்கம்
‘ஒரு மனிதரின் இரத்தத்தை எவர் சிந்துகிறாரோ அவரது இரத்தம் வேறொரு மனிதரால் சிந்தப்படும்’ என்று கடவுள் சொல்கிறார் எனில், அவரால் இரத்தம் சிந்தப்படும் என்று அர்த்தம் கிடையாது. அவருடைய இடத்தில் இருக்கும் அரசுகள் அப்படிப்பட்ட பணிகளைச் செய்யும் என்று புரிந்துகொள்ளவேண்டும். இன்றைய சூழலில் குற்றம் புரிகின்றவரை அல்லது ஒருவருடைய உயிரைப் பறிப்பவருக்கு தண்டனைக் கொடுக்கின்ற பொறுப்பு அரசாங்கத்திடத்தில் இருக்கின்றது. ஆனால், அது நேர்மையற்ற விதத்தில் நடத்துகொண்டால், ‘சிலப்பதிகாரத்தில் சொல்லப்படுவது போல, ‘அரசியலில் பிழை செய்தோருக்கு அறம்தான் கூற்றாக அமையும்’. ஆகையால் பொறுப்பில் இருப்பவர்கள் தாங்கள் கடவுள் இடத்தில் இருந்துகொண்டு அப்படிப்பட்ட பணியினைச் செய்கிறோம் என்பதை உணர்ந்து, நேர்மையான வழியில் நடப்பது நல்லது. அதே நேரத்தில் தவறுசெய்வோர் மனம்திருந்தி நடப்பது நல்லது.
சிந்தனை
Source: New feed