ஓ, இயேசுவின் திரு இதயமே! உமது அரசு வருக! அனைத்து இன மக்களுக்கும் நீர் அரசாக இருப்பீராக! உமக்கு பிறமாணிக்கமாய் இருப்பவர்களுக்கு மாத்திரம் அல்ல, ஊதாரியைப்போல் உம்மை விட்டு விலகிப் போயிருப்பர்வகளுக்கும் நீர் உத்தம அரசாராய் இருப்பீராக!
அமைதியின் அரசியாகிய புனித மரியாவின் மாசற்ற இதயத்தின் வழியாக எங்கள் நாட்டில் உமது அரசை நிறுவீராக! எங்கள் குடும்பங்களினுள் நுழைந்து, அவற்றை உமக்கே சொந்தமாக்கியருளும் இவ்விதம், உலகின் கோடிமுனை தொடங்கி மறுகோடிமுனை மட்டும் “நம் அரசாரகிய இயேசு கிறிஸ்துவின் திரு இதயம் வாழ்த்தப்படுவதாக! என்றென்றைக்கும் அத்திரு இதயம் புகழப்படுவதாக!” என்று ஒரே குரல் ஒலியாய் இருப்பதாக! ஆமென்.
Source: New feed