புனித வளன் கத்தோலிக்க அச்சகம் மீண்டும் வடபகுதியின் முன்ணனி அச்சகமாகும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் அச்சக இயக்குனர் ஏ.றொசான் அடிகளார் என்ற செய்தியை உண்மையின் எண்;ணங்கள் தலையங்கத்தில் சிறப்பு முக்கியத்துவத்துடன் பதிவு செய்கிறது
புனித வளன் கத்தோலிக்க அச்சகம் மீண்டும் வடபகுதியின் முன்ணனி அச்சகமாகும் என்ற நம்பிக்கை அறிவிப்பு துணிவோடும் தூரநோக்கோடும் பரந்த பாரிய நிர்வாக திட்டமிடலின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஒரு நம்பிக்கை அறிவிப்பாகும். புனித வளன் கத்தோலிக்க அச்சகம் நீண்ட காலமாக வடபகுதியின் முன்ணனி அச்சகமாக சகல வசதிகளுடனும் அனைவருக்கும் பணியாற்றிய காலம் இருந்தது. அச்சகம் என்றால் அது கத்தோலிக்க அச்சகம்தான் என்று பல்கலைக்கழகம் முதல் பாடசாலைகள் ஈறாக அனைத்து அச்சுப்பணிகளும் இங்கே மேற்கொள்ளப்பட்ட காலம் இருந்தது.
இலங்கையின் முதற் தமிழ் கத்தோலிக்க வாரஏடு என்ற பெருமையுடன் அங்கிருந்து வெளிவரும் யாழ் மறைமாவட்ட கத்தோலிக்க அதிகாரபூர்வ ஏடான பாதுகாலவன் பத்திரிகையே முதன் முதலில் எதிர்பதிவு அச்சுமுறையில் வெளியான பத்திரிகையாகும். போரும் போட்டிகளும் நவீன விலையுயர் இயந்திரங்களும் வந்தபோது வளர்ச்சிப்படிகளில் வேகமாக கத்தோலிக்க அச்சகம் ஏறவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.
புனித வளன் கத்தோலிக்க அச்சகத்தை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டியது காலத்தின் தேவையாகும்.
அப்பணியை துணிவோடும் தூரநோக்கோடும் பரந்த பாரிய நிர்வாக திட்டமிடலோடும் யாழ் ஆயர் மேதகு கலாநிதி பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் வழிகாட்டலுடன் மேற்கொள்ளும் புனித வளன் கத்தோலிக்க அச்சக இயக்குனர் ஏ.றொசான் அடிகளாரை காலைக்கதிர் பத்திரிகையின் கிறிஸ்தவ செய்தி இதழு; வெகுவாகப் பாராட்டி நிற்கிறது.
அச்ச இயக்குனராக பணியாற்றுவது ஒரு இலகுவான பணியல்ல. வருகின்ற எல்லா வேலைகளையும் எடுக்க வேண்டும் என்ற ஏக்கம் இருக்கும். ஏல்லாவற்றையும் உரிய நேரத்தில் முடிக்க வேண்டும் என்ற அங்கலாய்ப்பு இருக்கும். வருகின்ற குற்றங்களையும் குறைகளையும் தனிமனிதனாய் தாங்க வேண்டிய வேதனை இருக்கும். அச்ச இயக்குனராக பணியாற்றுவது ஒரு இலகுவான பணியல்ல.
புனித வளன் கத்தோலிக்க அச்சக இயக்குனர் ஏ.றொசான் அடிகளாரை எடுக்கின்ற திட்டமிடல்கள் அனைத்து சிறப்புற காலைக்கதிர் கிறிஸ்தவ செய்தி இதழு; அன்பு நெஞ்சங்;களின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது.
-
Ruban Mariampillai Mariampillai