நம் அன்னை மரியாளை பற்றி அவர் எப்படி இறைவல்லமையை தாங்கினார் சிந்தித்து கொண்டு இருந்தேன் . திருப்பாடல் நமக்கு கடவுளின்
வல்லமையை பற்றி இவ்வாறு கூறு கின்றது
ஆண்டவரே, உமது கடிந்துரையாலும் உமது மூச்சுக் காற்றின் வலிமையாலும் நீர்த்திரளின் அடிப்பரப்பு தென்பட்டது; நிலவுலகின் அடித்தளம் காணப்பட்டது. ( திருப் பாடல் 18 : 15 )
கடவுளின் மூச்சு காற்றுக்கே கடலின் அடி ஆழம் தென் படுகின்றது . நிலா உலகின் அடி ஆழம் தென் பட்ட்து என்றால் இறைவனின் வல்லமையை சற்று யோசித்துப் பாருங்கள் . இவ்வளவு வல்லமை உடையவராய் இறைவன் அன்னை மரியா ஒரு பதினைந்து வயது பெண் குழந்தை இடம் வரும் போது தன் உடலில் எப்படி தாங்கி இருப்பார் ??
நினைத்தது கூட பார்க்க முடிய வில்லை
பழைய ஏற்பாட்டில் ஏசாயா இறைவாக்கினர் இறைவனை கண்டா போது ஐயோ என்று கதறி கீழே விழுந்தார் . தானியேல் இறைவாக்கினர் வானதூதரை பார்த்த போது ஐயோ நான் செத்தேன் என்று கதறி மயங்கி விழுந்தார். திருத்தூதர் யோவான் தன் திருவெளிப்பாட்டில் வானதூதரை பார்த்த போது , ஐயோ செத்தேன் என்று கதறி கீழே விழுந்தார் என்று திருமறை நூலில் படிக்கின்றோம்
ஆனால் இறைவன் கருவாக தன்னை மாற்றி அந்த இளம் பெண்ணிடம் இறங்கிய போது , அன்னை மரியாளோ கொஞ்சம் கூட அதிராமல் ஒரு பூவை போன்று மலர்ந்து நின்றார் , எனக்கே இது ஆச்சரியம்?? அன்னை மரியாள் எப்படி தாங்கி இருப்பார் ?? இது புரியாது தியானித்து கொண்டு இருக்கும் போது பரிசுத்த ஆவியானவர் என்னை ஆடிக்கொண்டு சொன்னார். எல்லாம் நான் தான் என்று .
அப்போது தான் எனக்கு நினைவு வந்தது . கபிரியேல் வான தூதர் அன்னை மரியாளை சந்தித்த போது பரிசுத்த ஆவியானவர் உம் மீது வருவார் .கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும் . என்று சொன்னது
அப்போ கடவுள் வல்லமை இறங்கி வரும் போது பரிசுத்த ஆவியானவர் வல்லமையால் தாங்க , ஒரு பூவில் தேனெடுக்க தேனீ வந்து இறங்கியதை போல இறைவன் அன்னை மரியாளின் கருவாய் பிரவேசித்தார் . எப்படி என்றால் ஒரு தண்ணீர் நிரம்பிய ஆழமான கிணற்றில் ஒரு கல்லை போட்டால் கல்லின் பாரத்தை தண்ணீர் தாங்கி கொண்டு பாரமான கல் மெதுவாக இறங்கிவதை போல இறை வல்லமை அன்னை மரியாளுக்குள் பிரவேசித்தது
அன்னை மரியாள் கொஞ்சம் கூட பதறாமல் ஒரு மலர்ந்த பூவை போல இறைவனை பெற்றுக் கொண்டார் என்பதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கின்றது . பிற சபையினர் பரிசுத்த ஆவியை கொடுக்கின்றேன் என்று கூறி பெண்களை உருண்டு ஓட வைத்து அலைக்கழிக்கின்றார்களே / நினைத்து பாருங்கள்
ஆண்டவராகிய இயசு கிறிஸ்து தன் அன்னையை எந்த அளவிற்கு பாது காத்து தாங்கி இருக்கின்றார் என்று இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்
Source: New feed