மாட்சிமை தங்கிய முதுபெரும் தந்தையாகிய புனித இஞ்ஞாசியாரே! பஞ்சம், வறுமை, நோய் போன்ற கொடுமைகளிலிருந்தும், சாவைத்தரும் தொற்று நோயினின்றும், சிறப்பாக கொடிய பாவத்தினின்றும் எங்களைக் காப்பாற்ற இறைவனின் திருமுன் பரிந்துரைக்கக் கருணை புரிந்தருளும். நாங்கள் உமது நன் மாதிரியைப் பின்பற்றி இறைவனுடைய அதிமிகப் புகழுக்காவும், மக்களின் மீட்புக்காகவும் வருந்தி உழைக்கும் உறுதியான ஆவலையும் எங்களுக்குத் தந்தருளும். கடைசியாய் இயேசுவின் திரு இதயம் எங்கள்பேரில் இரங்கி, அனைத்துக்கும் கொடுமுடியான நிலைமை வரத்தையும் விண்ணுலகப் பேற்றையும் எங்களுக்குக் கட்டளையிட்டருள எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
ஆமென்.
புனித இஞ்ஞாசியார் மன்றாட்டு மாலை
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்னையை நன்றாகக் கேட்டருளும்
பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
தூய தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
தூய மரியாயே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் புனித இஞ்ஞாசியாரை மிகவும் ஆசிர்வதித்து வழிநடத்திய அமலோற்பவ அன்னையே.
இயேசு சபையை நிறுவியவரான புனித இஞ்ஞாசியாரே.
ஸ்பெயின் நாட்டிலே, லொயோலா கோட்டையிலே பிறந்தவரே.
இராணுவத்தில் பணிhயற்றியபோது, பம்பலோனா முற்றுகையில் குண்டடிப்பட்டவரே.
மருத்துவ மனையில் கிறிஸ்துவின் வரலாற்றையும், புனிதர்களின் வரலாற்றையும் வாசித்து, இறைவன்பால் முற்றும் திரும்பியவரே.
ஓராண்டு காலம் மன்ரேசாவில் ஒருவந்தியாக வாழ்ந்தவரே.
இறைவனின் திருவுளத்தை அறிய, புனித நாட்டுக்குப் பயணமானவரே.
33 வயதிலே பார்சலோனா பள்ளியில் சேர்ந்து, இலத்தீன் மொழி பயின்றவரே.
11 ஆண்டுகளாக பல்வேறு பல்கலைக் கழகங்களில் மெய்யிலும் இறையியலும் பயின்றவரே.
1535 – இல் பாரிசில் பட்டம் பெற்றபோது புனித பீட்டர் பாவர், புனித பிரான்சிஸ் சவேரியார் உட்பட ஆறு இளைஞர்களை; தவவாழ்வுக்குக் கொண்டு வந்தவரே.
ஏழுபேரும் தொடங்கிய புதிய துறவு சபைக்கு, திருத்தந்தை இரண்டாம் சின்னப்பரிடம் உடன்பாடு பெற்றவரே.
பதினாறே ஆண்டுகளில் நூறு இல்லங்களும் ஆயிரம் துறவியருமாகச் சபை பெருகியதைக் கண்டு மகிழ்ந்து இறைவனைப் புகழ்ந்தவரே.
மக்களுடைய ஈடேற்றத்துக்காக எல்லையற்ற ஆவல் கொண்டவரே.
அநேகமுறை திருக்காட்சிகளைக் காணும் பேறுபெற்றவரே.
ஞானப் போர்முறையைக் கண்டுபிடித்தவரே.
ஆன்மீக முயற்சிகளை உண்டாக்கியவரே.
மக்களை மீட்பதிலே உயர் நாட்டம் கொண்டிருக்கிற கருவூலமே.
நற்செய்தியின் ஆலோசனைகளைக் குறையற அனுசரித்தவரே.
குறையற்ற அறநெறியின் சிறந்த மாதிரியே.
இறை ஊழியத்தில் மிகுந்த பற்றுதலுள்ளவரே.
குருத்துவத்தின் பேரழகே.
பல்வேறு செபமுறைகளை ஞான வாழ்வில் அறிமுகப்படுத்தியவரே.
இளைஞர்களை அற வழியில் வளர்க்க கல்விப் பணி ஆற்றியவரே.
உலகப்பற்றினை வென்றவரே.
குற்றங்களைப் பொறுக்கின்றவரே.
இயேசு கிறிஸ்துவின் மீது கொண்ட அன்பினால் ‘உலகுக்குத் தீ மூட்டுங்கள்!’ என்று தூண்டியவரே
இறைவனுடைய திருவுளத்துக்குக் கீழ்ப்படிந்தவரே.
திரளான பாவிகளை நன்னெறியில் திருப்பினவரே.
யாவர்க்கும் அறிவுத் தெளிவுள்ள ஆசிரியரே.
பற்றுறுதியாளரை ஆதரிக்கிறவரே.
வானத்தூதர்களுக்கு நிகரானவரே.
பணிகளையெல்லாம் இறைவனின் அதிமிகப் புகழுக்காகவே செய்து முடித்து, 1556-ல் உயிர் நீத்த புனித இஞ்ஞாசியாரே.
உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே
எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி
உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே
எங்களை; மன்றாட்டை தயவாய் கேட்டருளும் சுவாமி
உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே
எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
மு. கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படியாக.
து. புனித இஞ்ஞாசியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
செபிப்போமாக
புனிதரின் பேரின்பமாகிய இறைவா, உம்முடைய திருச்சபை பல்வேறு பிரிவினைக் கொள்கைகளால் அலைக்கழிக்கப்பட்ட காலத்தில் உம்முடைய திருப்பெயரின் மகிமையை எங்கும் பரப்பவும், திருச்சபையின் மறுமலர்ச்சிக்குக் கீழ்ப்படிதலுடன் ஒத்துழைக்கவும் புனித லொயோலா இஞ்ஞாசியாரை அழைத்தீரே. அவருக்காகவும் அவர் நிறுவிய சபைக்காகவும் உம்மைப் போற்றுகிறோம். அவருடைய எடுத்துக்காட்டாலும் உதவியாலும் நாங்கள் எல்லாத் தீமைகளையும் எதிர்த்து வீரத்துடன் போராடவும். வெற்றிவாகையைப் பெற்றுக் கொள்ளவும் எங்களுக்கு அருள்வீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம்.
ஆமென்.
Source: New feed