இயேசு கிறிஸ்து, யோர்தான் நதியில் இறங்கி திருமுழுக்குப் பெறுவதற்கு முன்னால், அவர் மக்கள் கூட்டத்திற்குள் சென்றே ஆற்றை அடைய வேண்டியிருந்தது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசுவின் திருமுழுக்குத் திருவிழாவையொட்டி, திருத்தந்தை வழங்கிய ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில், இயேசு, தண்ணீரில் இறங்கு முன்னர், மக்கள் கூட்டத்திற்குள் இறங்க வேண்டியிருந்தது என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை, தண்ணீருக்குள் இறங்குமுன்னரே மக்கள் கூட்டத்திற்குள் இயேசு இறங்கியது, பாவம் தவிர மற்றனைத்திலும் அவர் மனித உருவெடுத்திருந்தார் என்பதைக் குறிப்பதாக இருக்கிறது என்றார்.
அருளும் கருணையும் நிறைந்த தன் தெய்வீகப் புனிதத்துவத்தில் இறைமகன் இயேசு மனுவுரு எடுத்து, இவ்வுலகின் பாவங்களை எடுத்துச் செல்ல வந்தார் என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் பொது வாழ்வு மற்றும் பணியின் துவக்கமாக அமைந்த இந்த திருமுழுக்கு, நாமும் இயேசுவோடு இணைந்து பணியாற்றவேண்டியதை குறித்து நிற்கிறது என்றார்.
இயேசுவின் திருமுழுக்குத் திருவிழா, நம் திருமுழுக்கின் வாக்குறுதிகள் குறித்த உறுதிப்பாட்டை புதுப்பிக்க உதவுகிறது என, தன் மூவேளை செப உரையில் மேலும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்
Source: New feed