செப்டம்பர் மாதத் துவக்கத்திலிருந்து, படைப்பின் பாதுகாவலர் என்று போற்றப்படும், அசிசி நகர் புனித பிரான்சிஸ் திருநாளான அக்டோபர் 4ம் தேதி முடிய கத்தோலிக்கத் திருஅவையில் கடைபிடிக்கப்படும் படைப்பின் காலம் என்ற சிறப்பு இறைவேண்டல் காலத்தையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டு வரும் டுவிட்டர் செய்திகளின் தொடர்ச்சியாக, செப்டம்பர் 25, இவ்வெள்ளியன்று, மற்றொரு டுவிட்டர் செய்தியை பதிவு செய்திருந்தார்.
“இறைவனின் படைப்பிற்கு மனிதர்களால் இழைக்கப்பட்டுள்ள சேதங்களை சீராக்க, ஒவ்வொருவரின் திறமையும், முழு ஈடுபாடும் தேவைப்படுகின்றன” என்ற சொற்களை, திருத்தந்தை #SeasonOfCreation என்ற ‘ஹாஷ்டாக்’குடன் வெளியிட்டிருந்தார்.
மேலும்,
போலந்து நாட்டு அரசுத்தலைவர் Andrzej Duda அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, செப்டம்பர் 25, இவ்வெள்ளிக்கிழமை காலையில், திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்புக்குப்பின், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும் போலந்து அரசுத்தலைவர் Duda அவர்கள் சந்தித்தார்.
போலந்து நாட்டிற்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், மற்றும், அந்நாட்டில் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் பொதுநலப் பணிகள் போன்ற தலைப்புகளும், இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என, திருப்பீட செய்தி தொடர்பகம் அறிவித்தது.
Source: New feed