ஆண்டவர் இயேசு உயிர்த்த நாளில் மிளேச்சல் தனமான தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிர் நீத்த எமது உறவுகளுக்கான விசேட திருப்பலி இன்று24.04.2019 புதன் கிழமை மன்னார் மறைமாவட்ட ஆயர் தலமையில் குருக்கள் இணைந்து கூட்டுத்திருப்பலியாக இடம் பெற்றது.
விசேட விதமாக இத் திருப்பலி வேளையில் குண்டு்தாக்குதலினால் பலியான உள்நாட்டு, வெளிநாட்டு மக்கள் அனைவரின் ஆன்மாக்களும் நித்திய இளைப்பாற்றி அடைய வேண்டியும், அத்தோடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வரும் அனைத்து மக்களும் நற்சுகம் பெற்று வீடு திரும்பவும் வேண்டி விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், இறந்த உறவுகளினால் ஆறாதுயரில் மூழ்கி நிற்கும் அனைத்து உறவுகளுக்கும் ஆண்டவர் யேசுவின் ஆசீரும்,செபங்களும் கிடைக்கப்பெற வேண்டியும் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இத்திருப்பலியில் மன்னார் மறைமாவட்ட குருக்களும் , அருட் சகோதரர்களும் ,அருட்சகோதரிகளும் கலந்து கொண்டு இறந்தவர்களுக்காக செபித்தனர்
Source: New feed