
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் திரு.ஜகத் அபேசிங்க அவர்கள் இன்று கொழும்பிலுள்ள பேராயர் மெல்கம் கார்டினல் ரஞ்சித் அவர்களை பேராயர் அவர்களின் உத்தியேக பூர்வ இல்லத்தில்சந்தித்து உரையாடியுள்ளார்
ஈஸ்டர் ஞாயிறு அன்று இடம் பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் தொண்டர்கள் பதிக்கப்பட்ட அனைவரினதும் வீடுகளுக்கும் சென்று தகவல்களை சேகரித்து வரும் நிலையில் இன்றைய தினத்தில்
இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் தலைவர் ஜகத் அபேசிங்க அவர்களும், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் மகேஷ் குணசேகர அவர்களும் இன்று காலை பேராயரை சந்தித்து உரையாடியுள்ளதோடு
எதிர்காலத்திலும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு செஞ்சிலுவை சங்கம் எவ்வாறு உதவ முடியும் என்பதைப் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
Source: New feed