மணிக்கு சில்லாலை புனித யோசப் வாஸ் திருத்தலத் திருவிழா யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. ஆயர் தனது மறையுரையில் இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கத்தோலிக்க மக்கள் எதிர்கொண்ட சவால்களையும் அதனை மேற்கொள்ள புனித யோசப் வாஸ் பொதுநிலை மக்களின் விகவாசத்தை வலுப்படுத்தி வழிநடத்த மேற்கொண்ட முயற்சிகளை எடுத்துக்கூறி யாழ்ப்பாண மறைமாவட்டத்தில் இவ்வருடம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அழைத்தல் ஆண்டில் பெறுநிலையினர் தமது விகவாச வாழ்வை வலுப்படுத்தி திருச்சபையின் நற்செய்தி அறிவிப்புப் பணியில் ஆர்வமுடன் ஈடுபடமுனைய வேண்டும் என்ற அழைப்பினையும் விடுத்தார்.
திருப்பலியின் இறுதியில் புனிதரின் திருச்சுருப ஆசீர்வதம் ஆயரினல் வழங்கப்பட்டது. திருப்பலியை தொடர்ந்து இளையோர் ஆண்டு நிறைவுநாள் நிகழ்வும் அழைத்தல் ஆண்டு அங்குரார்ப்பண நிகழ்வும் நடைபெற்றன. இளையோர் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட அதிஸ்டலாப சிட்டைகளுக்கான சீட்டுழுப்பும் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயிரத்திற்கும் அதிகமான பொதுநிலையிரும், குருக்கள், துறவிகளென பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்விற்கன ஏற்பாடுகள் அனைத்தும் சில்லாலை பங்குத்தந்தை அருட்திரு அகஸ்ரின் அடிகளாரினால் மேற்கொள்ளப்பட்டிருந்து
Source: New feed