பாலின முறைகேடுகளால் பாதிக்கப்பட்டோருக்கு செவிமடுப்பதன் வழியே, இந்தப் பிரச்சனையில் திருஅவை மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகள், சட்டத் திட்டங்கள் ஆகியவற்றை நாம் முடிவு செய்யவேண்டும் என்று, திருத்தந்தை வலியுறுத்தியுள்ளதை, திருப்பீட அவையொன்று தன் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
சிறார் பாதுகாப்புக்கென உருவாக்கப்பட்டுள்ள திருப்பீட அவை, செப்டம்பர் 7ம் தேதி முதல், 9ம் தேதி முடிய, உரோம் நகரில் நடத்திய ஆண்டுக்கூட்டத்தின் இறுதியில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளது.
பாதிக்கப்பட்டோருக்கு செவிமடுப்பது ஒரு முக்கியமான கடமை என்றாலும், இத்தகைய குற்றம் நிகழாமல் தடுப்பது எப்படி என்பதைச் சிந்திப்பது, அதைவிட மிக முக்கியமான கடமை என்றும், இத்திருப்பீட அவை, அந்த வழியில் தன் கவனத்தையும், முயற்சிகளையும் அதிகம் திருப்பியுள்ளது என்றும், இவ்வறிக்கை கூறுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல், இத்திருப்பீட அவை, 100க்கும் மேற்பட்ட கருத்தரங்குகளை ஏற்பாடு செய்துள்ளது என்றும், இவை அனைத்திலும், வருங்கால அருள் பணியாளர்களின் உருவாக்கம் முக்கியமான கருத்தாக விவாதிக்கப்பட்டது என்றும், இவ்வறிக்கை கூறுகிற
சிறார் பாதுகாப்பு திருப்பீட அவையின் அறிக்கை
September 10, 2018
One Min Read
Related Posts
கிறிஸ்து பிறப்பு வியப்படைவதற்குரிய ஒரு சிறப்புத் தருணம்!
December 21, 2024
திருத்தந்தை, ஜோ பிடனுடன் தொலைபேசியில் உரையாடினார்
December 21, 2024
கிறிஸ்து பிறப்பு விழாவிற்கான திருப்பலிகள்
December 21, 2024