கோவிட்-19 கொள்ளைநோய், மனித வரலாற்றில் ஒரு மிக வேதனையான மைல்கல்லை நிறுவியுள்ளது, அதாவது, இந்தக் கொள்ளைநோய்க்கு 10 இலட்சம் மக்கள் பலியாகியுள்ளனர் என்று, ஐ.நா. நிறுவனத்தின் தலைமைச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.
இந்த வேதனையான உண்மை, வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல, அது, தனித்தனி மனிதர்களைக் குறிக்கிறது என்று கூறிய கூட்டேரஸ் அவர்கள், இந்த மரணங்களில் கூடுதல் வேதனை என்னவெனில், இந்த மரணத்தைச் சந்தித்தவர்கள், தங்கள் உறவுகளிடம் விடைபகரவும் முடியாமல், இந்தத் தொற்றுக்கிருமி செய்துவிட்டது என்று, வேதனையுடன் குறிப்பிட்டார்.
எனினும், இந்தத் தொற்றுக்கிருமியின் தாக்குதலிலிருந்து நாம் ஒருங்கிணையும் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்றும், பொறுப்புள்ளவர்களாகவும், அறிவியல் தகவல்களுக்கு செவிமடுப்பவர்களாகவும் நம் தலைவர்கள், ஒன்றிணைந்து முயன்றால், இந்தத் தொற்றுக்கிருமியை தடுக்கவும், அழிக்கவும் நாம் சக்தி பெறுவோம் என்று கூட்டேரஸ் அவர்கள் கூறினார்.
பத்து இலட்சம் உயிர்கள் என்ற மைல்கல், நம்மைச் சிந்திக்க அழைக்கிறது. நாம் தற்போது மேற்கொள்ளும் முடிவுகள், வருங்கால தலைமுறையினர், இத்தலைமுறையினரை எவ்விதம் கருதுவர் என்பதற்கு விடுக்கப்பட்டுள்ள சவால்கள் என்று, WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனத்தின் தலைமை இயக்குனர், Tedros Adhanom Gehbreyesus அவர்கள், இச்செவ்வாயன்று விடுத்துள்ள ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
கோவிட்-19 கிருமியை 15 முதல் 30 நிமிடங்களுக்குள் துரிதமாகக் கண்டறியும் சோதனை முறைகள் தயாராக உள்ளன என்றும், அடுத்துவரும் 6 மாதங்களில், இந்த முறைகள், 12 கோடி என்ற எண்ணிக்கையில் உலகெங்கும் விநியோகிக்கப்படும் என்றும் WHO அறிக்கையொன்று கூறுகிறது.
Source: New feed