

குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் அன்று காலை நடைபெற்ற சிறப்புத்திருப்பலியை தொடர்ந்து பங்குத்தந்தை அருட்தந்தை யாவீஸ் அவர்களின் தலைமையில் அஞ்சலி நிகழ்வு அங்கு நடைபெற்றது. படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூர்ந்து மக்கள் ஈகைச்சுடர்கள் ஏற்றி உணர்வுபூர்வமாக இவ்வஞ்சலி நிகழ்வில் பங்குபற்றினார்கள்.
1993ஆம் ஆண்டு இதே தினம் கிபிர் விமானங்கள் கண்மூடித்தனமாக குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தின்மீது மேற்கொண்ட பயங்கரவாத குண்டுத்தாக்குதலில் அங்கு வழிபாட்டிற்காக சென்றிருந்த 9 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் பலர்காயமடைந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Source: New feed