ஏன் இப்படி ஒரு சம்பவம் இடம்பெற்றது என இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவங்கள் குறித்து மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
கடந்த 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலின் போது உயிரிழந்த உறவுகளுக்கான அஞ்சலி நிகழ்வு இன்று காலை கறிற்றாஸ் வாழ்வுதய மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
உயிர்த்த ஆண்டவரின் விழாவை கொண்டாட வந்திருந்த வேளையில் உயிர்களை தியாகமாக கொடுக்க வேண்டிய நேரிட்டது. அது எங்கள் அனைவரையும் பாதித்துள்ளது
தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்ற போது அவ் இடங்களில் இருந்தவர்களுடைய கதைகளை கேட்கின்ற போது மிகவும் வேதனை ஏற்படுகின்றது.
ஏன் இப்படி ஒரு சம்பவம் இடம்பெற்றது? எமது நாட்டின் பாதுகாப்பு போதமையினாலா? அல்லது மக்கள் ஒருவருக்கு ஒருவர் விரோதமாக செல்லுவதினாலா? என்று தெரியவில்லை.
நாங்கள் ஒன்று கூடி வாழ வேண்டும். ஒருவரை ஒருவர் பாதுகாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்
Source: New feed