ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்கு, மன்னிக்கும் பண்பு மிகவும் முக்கியம் என்பதை வலியுறுத்தி, இச்சனிக்கிழமையன்று, தனது டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
“உன்னதமான குடும்பம் போன்ற காரியம் வேறு எதுவுமில்லை. ஒவ்வொரு நாளும் குடும்பத்தில் மன்னிக்கும் பண்பை செயல்படுத்துவதன் வழியாக, அது வளர முடியும்” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இச்சனிக்கிழமையன்று பதிவாகியிருந்தன.
மேலும், திருவருகைக் காலம் என்பது, நம்மைச் சந்திக்க வருகின்ற ஆண்டவரை வரவேற்கவும், கடவுள் மீது நாம் கொண்டிருக்கும் ஆவலை ஆராய்ந்து பார்க்கவும், கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை கண்ணோக்கி, அதற்கு நம்மைத் தயாரிக்கவும் கொடுக்கப்பட்டுள்ள காலமே என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 3ம் தேதி, ஞாயிறு மூவேளை செப உரையில், திருவருகைக் காலம் பற்றி இவ்வாறு கூறியத் திருத்தந்தை, நம் சகோதரர், சகோதரிகளில் ஆண்டவரைக் கண்டுகொண்டு, அவர்களை அன்புகூரவும், இக்காலம் நமக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
டிசம்பர் 02, இஞ்ஞாயிறன்று திருவருகைக் காலம் தொடங்குவதை முன்னிட்டு, வத்திக்கான் செய்திகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், அக்காலம் பற்றிய சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளது
Source: New feed