ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வை, நல்லதொரு கலைப்பொருளாக உருவாக்கவேண்டியதன் தேவையைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று, தன் டுவிட்டர் செய்தி வழியே விண்ணப்பித்துள்ளார்.
“அனைவருக்கும் இயலக்கூடிய ஒரே ஒரு கலைப்பொருளை நாம் அனைவரும் நன்முறையில் உருவாக்கவேண்டும் என்று இயேசு நம்மிடம் கேட்கிறார். அதுவே நம் வாழ்வு” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.
மேலும், ஒப்புரவு என்ற அருளடையாளத்தைத் தவறாகப் பயன்படுத்தியது, மற்றும், சிறாரை பாலியல் முறைகேடுகளுக்கு உள்ளாக்கியது என்ற குற்றங்களுக்காக, அமெரிக்க ஐக்கிய நாட்டு கர்தினால் தியடோர் மெக்காரிக் அவர்களின் குருத்துவப் பணிகள் அனைத்தும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஒப்புதலுடன், தடைசெய்யப்பட்டுள்ளது என்று, விசுவாசக் கோட்பாட்டு பேராயம் அறிவித்துள்ளது. திருஅவையின் அருள்பணியாளராக அவர் இனி செயல்படமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, பிரான்ஸ் நாட்டில் திருப்பீடத்தூதராகப் பணியாற்றும் பேராயர் லுயிஜி வெந்தூரா அவர்கள் மீது, பிரான்ஸ் அரசால் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து, பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த, திருப்பீட தகவல் துறை தலைவர் அலெசாந்த்ரோ ஜிசோத்தி அவர்கள், இந்த வழக்கைக் குறித்து தெரிய வந்துள்ள திருப்பீடம், விசாரணையின் முடிவுகளுக்காகக் காத்திருப்பதாகக் கூறினார்
Source: New feed