மிகக் கடினமானத் தருணங்களைச் சந்தித்துவரும் திருவையிலும், உலகிலும் வாழும் நமக்கு, இந்த தவக்காலம், இறைவனிடம் திரும்பிவரும் நம்பிக்கையை வழங்கவேண்டும் என்று, எருசலேம் இலத்தீன் வழிபாட்டு முறை அப்போஸ்தலிக்க நிர்வாகியான பேராயர் Pierbattista Pizzaballa அவர்கள் தன் தவக்காலச் செய்தியில் கூறியுள்ளார்.
தவக்காலம், உயிர்ப்பு ஆகய அருள்நிறை தருணங்கள் வழியே, கிறிஸ்து, நம் வாழ்வு என்ற பாலை நிலத்தில் நுழைந்து, அங்குள்ள வறட்சி, இறுகிப்போன தன்மை அனைத்தையும் நீக்கவேண்டும் என்று பேராயர் Pizzaballa அவர்களின் செய்தி வலியுறுத்துகிறது.
தவக்காலத்தில் நாம் இறைவார்த்தைக்கு செவிமடுப்பதன் வழியே, நமது சுயநலத்திலிருந்து வெளியேறி, தேவையில் உள்ளோரையும், வறியோரையும் வரவேற்கும் மனநிலையை வளர்க்கவேண்டும் என்று பேராயரின் செய்தி அழைப்பு விடுக்கிறது.
நாம் பங்கேற்கும் அனைத்து திருவழிபாட்டு நிகழ்வுகளின் விளைவாக, வாழ்வில், மேலும், மேலும், சேர்த்து வைக்காமல், நம் வாழ்வை, அதிகமதிமாக வழங்க முன்வரவேண்டும் என்று, பேராயர் Pizzaballa அவர்கள் தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்