என்னை நானே நேசிக்கிறேன்
இரவில் அன்னையை யாசிக்கிறேன்
மண்ணை வாழ வையிறைவா
மனமார நித்தம் பூஜிக்கிறேன்!
தூய்மை படுத்தி உள்ளத்தினை
துயரைத் திருத்தியப் பள்ளத்தினை
வாய்மைக் கொண்டு மூடுகிறேன்
வாய்ப்பினை யதற்காய்த் தேடுகிறேன்!
சுயமே என்னை சோதிக்கிறேன்
சோதனை எதிரே வாதிக்கிறேன்
நயமார் தீர்பை நானடைய
நானே நீதி வழங்குகிறேன்!
எனக்கு நிகர் நானேதான்
எவருக்கும் நிகராய் நானில்லை
தன்னை சீராய்த் தானாக்க
மண்ணும் தானே சீரடையும்!