குடிபெயர்ந்துள்ள மற்றும் புலம்பெயர்ந்துள்ள இளையோரில் இருவரில் ஒருவர், தாங்கள் அடைக்கலம் தேடியுள்ள நாடுகளில் ஏற்கப்படுகின்றனர் என்று, யுனிசெப் அமைப்பு வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.
உலக சிறார் தினம் நவம்பர் இருபதாம் நாள் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ள, ஐ.நா.வின் யுனிசெப் குழந்தை நல அமைப்பு, இந்த இளையோரில் மூன்றில் ஒருவர் வீதம், நிறத்தை வைத்து பாகுபடுத்தப்படுகின்றனர் என்று கூறியுள்ளது.
மேலும், இந்த இளையோரில் 17 விழுக்காட்டினர், வன்முறையாலும், 32 விழுக்காட்டினர் சொல் வன்முறையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் யுனிசெப் அறிக்கை தெரிவிக்கின்றது.
குடிபெயர்ந்துள்ள மற்றும் புலம்பெயர்ந்துள்ள இளையோரில் நாற்பது விழுக்காட்டினர் தங்களுக்குள்ள உரிமைகள் பற்றி அறியாதிருக்கின்றனர் என்றும், ஐம்பது விழுக்காட்டினர் மட்டுமே தாங்கள் வாழும் நாடுகளில் ஏற்கப்பட்டுள்ளதை உணர்கின்றனர் என்றும், யுனிசெப் அமைப்பு, தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது
Source: New feed