இன்றுவரை தம்மைத் தாக்கியவர்களை தாக்கவில்லை. ஏனெனில் கிறிஸ்தவ மதகுருமார் மதநூலை மட்டும் கற்றவர்கள் அல்ல, மனிதனையும், மானிடவியல், உலகின் போக்குகள் அனைத்தையும் படித்தவர்கள். அதன் வழியே வாழ்ந்து காட்டுபவர்கள்.
02. வெடிகுண்டு வைத்து மக்கள் உயிரைக் காவு வாங்கிய பின் அதன் பின்னணியை விளக்க ஒரு மதகுரு, கடந்த காலத்தில் இடம் பெற்றவையின் பழிவாங்கல் இது என்று விளக்க நியாயம் கூற இன்னொரு மதகுரு, ஆனால் இன்று வரை அழித்தவர்கள் இனத்தை எந்த கிறிஸ்தவ மதகுருவும் பழிக்கவில்லை . அவர்கள் மீது இனத்துவேச வார்த்தைகளோ, கண்டனங்களோ தெரிவிக்கவில்லைலை.
03. வேற்று மதத்தவர்கள், தாக்குதல் நிகழ்த்தியவர்களை இழித்தும் பழித்தும் கூறும் போது, இலங்கை இஸ்ஸாமியர்களை அவ்வாறான ஒரு கண்கொண்டு நோக்க வேண்டாம் என்று அன்பு மழை பொழிந்த கர்தினால் ஆயர் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் இயேசு கிறிஸ்துவாகின்றார் .
04. எங்கள் மதத்தைப்பற்றி அவர்கள் அறிந்து வைத்துள்ளார்கள்; எங்கள் ஒற்றுமையை பெருக்கி விட்டார்கள், நாங்கள் உங்களை மன்னித்து விட்டோம். உங்களுக்காகவும் இறைவனிடம் செபிக்கின்றோம். என்றார்கள். அறம் என்று எல்லாவற்றையும் நியாயப்படுத்தும் மதவாதிகளுக்கு மதம் என்றால் என்ன? மனிதனின் மான்பு என்ன? என்று விளக்கி விட்டார்கள்.
05. இறைவன் இருக்குமிடம் இதயம் தானே, தங்கள் செயற்பாடுகளால் ஆலயத்தை இன்றும் புனிதமாக வைத்துள்ளார்கள். குருமார் மதவாதிகளாக கிறிஸ்தவத்தில் இல்லை. சர்வமதப்பிரியர்களே….
### கிறிஸ்தவம் என்பது இந்த யுகத்தின் முதல் மனிதனால் வாழ்ந்து காட்டப்பட்ட மதம். அன்பு ஒன்றே அகிலத்தின் சக்தி, ‘உன்னை நேசிப்பது போல உனக்கு அடுத்திருப்பவனையும் நேசி’ இது தான் கிறிஸ்தவ வாழ்வு. இது தான் மதக் கொள்கை. அன்பும் மன்னிப்பும் தான் கிறிஸ்தவத்தின் அடிப்படை போதனை. ###
ஆதலால் தான் இலங்கை கிறிஸ்தவர்கள் முன்னோடிகள்
Source: New feed