
றை இரக்கத்தின் ஞாயிறென சிறப்பிக்கப்படும் ஏப்ரல் 28ம் தேதி வழிபாட்டில், இலங்கை தாக்குதல்களில் இறந்தோர், காயமடைந்தோர், மற்றும் அவர்களது குடும்பத்தினரை, இறைவனின் இரக்கத்தில் ஒப்படைத்து செபிக்குமாறு பேராயர் Ferrao அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
இஞ்ஞாயிறன்று நிறைவேற்றப்படும் திருப்பலிகளுடன், மெழுகு திரிகள் ஏந்திய பவனிகளையும், திரு நற்கருணை ஆராதனைகளையும் மேற்கொள்ளுமாறு, பேராயர் Ferrao அவர்கள் தன் மடலில் பரிந்துரைத்துள்ளார்.
ஏப்ரல் 21, உயிர்ப்பு ஞாயிறன்று இலங்கையில் நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்களில், இதுவரை, 359 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், மேலும் 500க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும் ஊடகங்கள் கூறியுள்ளன.
Source: New feed