நம் பூர்வீக இன மற்றும் சமூகத்தில் புறந்தள்ளப்பட்ட மக்களின் சதைகளிலும், காயங்களிலும், மனப்புண்களிலும், ஒவ்வொரு நாளும் நாம் இயேசுவை சந்திக்கின்றோம் என்று, இந்திய தலத்திருஅவை உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
நவம்பர் 18, இஞ்ஞாயிறன்று அகிலத் திருஅவையில் சிறப்பிக்கப்படும் இரண்டாவது உலக வறியோர் நாளையொட்டி ஆசியச் செய்திக்குப் பேட்டியளித்த, மும்பை உயர்மறைமாவட்ட பேராயரும், இந்திய ஆயர் பேரவைத் தலைவருமான கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள், இவ்வாறு கூறினார்.
மும்பை மாநகருக்கு ஏறத்தாழ 200 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற Raigad பூர்வீக இன மக்களில், ஏழைகளை நாம் சந்திக்கின்றோம் என்றும், இம்மக்களைச் சந்தித்து இவர்களோடு செபித்து, உணவளிப்பது மட்டுமல்லாமல், ஒவ்வொரு நாளும் அவர்களை சந்தித்து முன்னேற்றுவதற்கு முயற்சிக்கிறோம் என்றும் கூறினார், கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ்.
“இந்த ஏழை கூவியழைத்தான், ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்” என்ற தலைப்பில், இரண்டாவது உலக வறியோர் நாள் சிறப்பிக்கப்படுகின்றது.
Source: New feed