நம் மீட்பின் அவசியத்தை அங்கீகரித்து ஏற்பதே, இயேசுவை அறிந்துகொள்வதற்குத் தேவையான முதல் படி, என்ற கருத்தை மையமாக வைத்து தன் டுவிட்டர் செய்தியை இச்செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
‘நம் வறிய நிலையையும், நாம் மீட்படைய வேண்டியவர்கள் என்பதையும் ஏற்றுக்கொள்வதே, இயேசுவை அறிந்துகொள்வதற்குத் தேவையான முதல் படி’ என்கிறது திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி.
இதற்கிடையே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வரும் ஆண்டில் மொரோக்கோ நாட்டிற்கு திருப்பயணம் மேற்கொள்ள உள்ளது குறித்து, இச்செவ்வாய்க்கிழமையன்று செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது, திருப்பீட தகவல் தொடர்புத் துறை.
திருப்பீட செய்தித் தொடர்பாளர் Greg Burke அவர்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, மொரோக்கோ நாட்டு மன்னர் 6ம் முகமது மற்றும் அந்நாட்டின் ஆயர்கள் விடுத்துள்ள அழைப்பின் பேரில், திருத்தந்தையின் திருப்பயணம் 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 30, மற்றும், 31 தேதிகளில் Rabat மற்றும் Casablanca நகர்களில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
Source: New feed