
என் நேசத்திற்குாிய சேசுவே, கடவுளின் மாசற்ற செம்மறிப்புருவையே, நான் மிகவும் நிா்பாக்கிய பாவியானாலும் நீா் உமது பாரமான திருச்சிலுவையைச் சுமந்துக்கொண்டு போனபோது உமது திருத்தோளை நிஷ்டூரமாய் கிழியச்செய்து உமது திருச்சரீரத்தில் உண்டான சகல காயங்களால் நீா் அனுபவித்த துயரத்தைப் பாா்க்கிலும் அதிக துயரத்தை வருவிக்கிற உமது திருத்தோளின் காயத்தைச் சாஷ்டாங்கமாய் வணங்கி நமஸ்காிக்கிறேன். மட்டற்ற துயரப்பட்ட சேசுவே, உம்மை ஆராதித்து என் முழு இருதயத்தோடு உம்மை புகழ்ந்து ஸ்துதித்து உமது திருத்தோளின் கொடூரக்காயத்திற்காக உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகிறேன். நீா் அனுபவித்த இந்த மட்டற்ற வேதனை உமது சிலுவையின் பாரச்சுமை அதிகாித்ததின் மேல் நான் நொந்தழுது பாவியாகிய என்போில் இரக்கமாயிருக்கவும், என் பாவ அக்கிரமங்களைப் பொறுத்து உமது சிலுவைப்பாதை வழியாய் என்னை மோட்ச பாக்கியம் சேர்ப்பிக்கவும் தயைபுரிய வேண்டுமென்று உம்மை இரந்து மன்றாடுகிறேன். ஆமென். மதுர சேசுவே! உமது திருத்தோளின் கொடூரகாயத்தைப் பாா்த்து உத்தாிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்கள் பேரில் இரக்கமாயிரும். பர. அருள். பிதா சுதன். ஆமென் சேசு.
Source: New feed