
அன்புக்கரங்களின் ஏற்பாட்டில் ஆனைக்கோட்டை பாலர் பாடசாலை பலர்கர்களுக்கு காலம் சென்ற முன்னாள் ஊர்காவற்துறை போலிஸ் பொறுப்பதிகாரி ச. ஞானபிரகாசம் நினைவாக அவரது பேரப்பிள்ளைகள் ஜோய், ஜோர்டி ஞானபிரகாசம் அவர்கள் வாரம் இரு முறை தொடர்ந்து சத்துணவு வழங்க முன்வந்துள்ளார்.
எமது கிராமத்தை சேர்ந்த புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் மூன்றாவது தலைமுறையான ஞா.ஜோய், ஞா.ஜோர்டி அவர்களையும், இதற்கு அதரவாக இருக்கும் அவரது தந்தை தாய் திருத்திருமதி ஞா.ஞானச்செல்வன் அவர்களையும் அன்புக்கரங்கள் சார்பாகவும், பங்கு மக்கள், பாலர் பாடசாலை சார்பாகவும் நன்றிகலந்த பாராட்டுகளும் நன்றிகளும். தொடர்தும் எமது தாய் தேசத்துக்கு உதவிட எமது மூன்றாம் ,நான்காம் தலைமுறை முன்வர வேண்டும் என்பதுடன் அவர்களை பெற்றார் ஊக்கப்படுத்த வேண்டும் என்பதுமே எமது பணிவான வேண்டுகோள் ஆகும். தொடர்ந்தும் அன்புக்கரங்கள் ஊடாக ஆதரவையும், உதவிகளையும் வழங்கி எம்முடன் இணைந்து பயணிப்போருக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்
Source: New feed