இந்த படமானது (வியாகுல அன்னையின் படம்) முதன் முதலில் தூய நற்செய்தியாளரான லூக்கா வரைந்ததாக
பாரம்பரியத்தின் மூலம்அறியப்படுகிறது. ஆனால் இதில் இடம்பெற்றுள்ள தூய மிக்கேல் அதிதூதர்
மற்றும் தூய கபிரியேல் அதிதூதர் மற்றும் பைசன்டின் முறை கிரேக்கஎழுத்துக்கள் தூய லூக்காவின
ஓவியத்தில் இல்லாததால் அதைத் தழுவி இவ் ஒவியம் கீழ்திசை கலைப் பண்பிலிருந்து வந்திருக்கக் கூடும்
என்றுஅறிஞர்கள் கருதுகின்றனர்.
இந்த ஓவியமானது 1325-1480 ஆண்டுகளுக்குள் தீட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருதுகின்றனர்.
கீரிட் தீவிலிருந்துபதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் உரோமைக்குக் கொண்டுவரப்பட்டது.
இதன் வருகைக்குப் பிறகு, உரோமையில் பல அற்புத நிகழ்ச்சிகள்நடைபெற்றன.
தேவதாய் ஒரு சிறுமிக்குக் காட்சியளித்தது அவற்றுள் ஒன்றாகும்.
தேவதாய் அந்தச் சிறுமியிடம், தனது அற்புத ஓவியமானதுஉரோமையில் உள்ள புனித மரியன்னையின்
பேராலயத்துக்கும் புனித யோவான் லாத்தரன் பேராலயத்துக்கும் இடையேஅமைக்கப்படவேண்டுமென்று
கேட்டுக்கொண்டாள். இவ்விரு பேராலயத்துக்குமிடையே புனித மத்தேயுவின் ஆலயம் அமைந்திருந்தது.
புனிதஅகுஸ்தீன் சபைக்குருக்கள் அதைக் க கண்காணித்து வந்தனர்.
இந்த ஆலயத்தின் பீடத்துக்குமேல் அந்தப் புனித படம் ஸ்தாபிக்கப்பட்டது.
மூன்று நூற்றாண்டுகளாக (1499-1798) இந்த அற்புதப் படம் தூய மத்தேயு ஆலயத்தில் வணங்கப்பட்டு வந்தது.
கிரீட் தீவில் இப்படத்திற்கு என்னபெயர் வழங்கப்பட்டது என்பதை நாமறியோம்.
ஆனால் உரோமையில் ‘இடைவிடா சகாயத்தாய்’ எனும் பெயரில் அழைக்கபட்டது.
ஏனெனில்தேவதாய் அந்த சிறுமிக்கு அளித்த காட்சியில், தனது படம் மக்களின் வணக்கத்துக்கு
உரியதாக்கப்பட வேண்டும் என்று அறிவித்தபோதுதான்’இடைவிடா சகாய மாதா’ என்று தெரிவித்தாள்.
அன்றிலிருந்தே நாம் அவ்வன்னையை ‘இடைவிடா சகாயமாதா’ அல்லது ‘சதா சகாயமாதா’
என்றழைத்துவருகிறோம். 1798ஆம் ஆண்டு புனித மத்தேயுவின் தேவாலயம் பிரஞ்சுக்காரரின்
படையெடுப்பால் அழிக்கப்பட்டது. அதைக்கண்காணித்து வந்த புனித அகுஸ்தின் சபைக்குருக்கள்
இந்த படத்தை அன்மையில் இருந்த ஒரு துறவற மடத்துக்கு மாற்றினார்கள்.
அதன்பின்னர்போஸ்தெருவா நகரில் உள்ள புனித மரியன்னையில் ‘செபக்கூடம்’
எனப்படும் தங்கள் செபக்கூடத்தில் அமைத்தனர். அங்கு 1866 வரை இந்தப் படம்மறைந்திருந்தது.
இந்நிலையில் அழிக்கப்பட்ட புனித மத்தேயுவின் பழைய ஆலயம் இருந்த இடத்தில்
இரட்சகர் சபைக் குருக்களால் தூய அல்போன்சா ஆலயம்புதிதாகக் கட்டப்பட்டது.
இறைவனது கருணை நிறைந்த பராமரிப்பின பயனாக இந்த அற்புதப் படம் கண்டுபிடிக்கப்பட்டது.
புனித பாப்பரசர் 9-ம்பத்திநாதர் இந்தப் படத்தின் வரலாற்றை அறிந்து,
அவருடைய கட்டளையின் பேரில் 1866ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 29ஆம் நாள்
திருப் பவனியாகஎடுத்துவரப்பட்டு தூய அல்போன்சா ஆலயத்தில் மறுபடியும்
மகிமைக்குரிய அதன் பழைய இடத்திலேயே நிறுவப்பட்டது.
அதன் பாதுகாப்பையும்இரட்சகர் சபைக் குருக்களிடம் ஒப்டைத்தார்.
அந்த சமயத்தில்தான் இந்தப் படத்துக்குரிய வணக்கத்தை உலகெங்கும் பரப்பும்படி
இடைவிடாசகாயத்தாயை அனைத்துலகும் அறியும்படி செய்யுங்கள்
என்று கட்டளையிட்டார். அன்றுமுதல் இரட்சகர் சபைக் குருக்கள் தம் சிரமீது
கொண்டுதம்மால் இயன்ற அளவு முயன்று, இந்தப் பக்தியைப் பரப்பி வருகின்றனர்.
Source: New feed