எங்கள் அருமைக் குழந்தை இயேசுவே!, அடியோரை ஆசீர்வதித்து வரவேற்க கரம் விரித்து காத்திருக்கின்றீர். செபத்தின் வழியாக உம்மை வாழ்த்தி வணங்க எங்களுக்கு உதவிபுரியும். நீரே எங்கள் ஆண்டவர்! நீரே எங்கள் மீட்பர்! எங்களைப் பற்றி உமக்கு எவ்வளவோ அக்கரை! எங்கள் மன்றாட்டுக்களை கேட்க எங்களோடு இருக்கின்றீர். எனவே எங்கள் குரலுக்குச் செவிசாய்த்து எங்கள் கோரிக்கைகளை கருணை கூர்ந்து அளித்தருளும். வல்லமை மிக்க உமது உதவியைத் தாழ்ந்த உள்ளத்தோடு இறைஞ்சி கேட்கிறோம். தந்தையோடும் தூய ஆவியோடும், இறைவனால் என்றென்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் இயேசுவே.! ஆமென்.
Source: New feed