தேவமாதாவைப் பற்றிய கத்தோலிக்கத் திருச்சபையின் போதனைகள் இவ்வாறு வெளிப்படையாக இருக்க, அதற்கு இணையாக தேவ அன்னையும் தமது பிள்ளைகளுக்கு அடிக்கடி தரிசனை தர திட்டமிட்டார்கள். திருச்சபையின் வரலாற்றிலே திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்ட காட்சிகளில், காட்சி பெறுபவருக்கும் தேவமாதாவுக்குமிடையே உறவே – பக்தியே வெளிப்படையாக இருக்கிறது.
சில சமயங்களில் தனிப்பட்ட, துறவற மடத்திற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவிற்கோ அல்லது ஒரு தனிப்பட்ட நாட்டிற்கோ வழங்கப்படும் நன்மைகளே நோக்கமாக இருக்கின்றன. முக்கிய காட்சிகள் நவீன உலகில் தோன்றும் விளைவுகளைக் குறித்தோ அருளப்படுகின்றன. சர்வேசுரனுக்கும், அவரது திருச்சபைக்கும் எதிரான போர் உக்கிரம் அடைந்தது போல தோன்றுகிறது.
சாத்தானின் இரகசிய சபையின் கொள்கையான உலக ஆதாயம் மற்றும் விசுவாசத் தளர்ச்சி ஆகியவை என்றுமில்லாத வகையில் அதிகரித்துள்ள வேளைகளில் கத்தோலிக்கர்களான தமது பிள்ளைகளை தங்களது விசுவாசத்தில் உறுதிப்படுத்தவும், தீமைகளை வெற்றிபெற தேவையான உபாயங்களை அறிவிக்கவும் தேவதாய் எப்போதும் இல்லாத வகையில் அடிக்கடி குறுக்கிடுகிறார்கள். காட்சிகளின் மூலமும், செய்திகளின் மூலமும் விசுவாசிகளைக் காப்பாற்றுகிறார்கள்.
திருச்சபையால் கடினமான ஆய்வுகளுக்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்ட தேவதாய் வழங்கிய முக்கிய காட்சிகளைக் காண்போம்.
குவாடலூப்பே – (1531)
16-ம் நூற்றாண்டில் புராட்டஸ்டாண்ட் தப்பறையால் கவரப்பட்ட 80 லட்சம் விசுவாசிகள் கத்தோலிக்க திருச்சபையிலிருந்து வெளியேறிய கேள்விகள் ‘அர்ச். ஜூவான்தியாகோவுக்கு Tepeyac மலையில் 1531-ம் ஆண்டு டிசம்பர் 9, 10, 12 ஆகிய தேதிகளில் அன்னை காட்சியளித்தார்கள். தாம் காட்சியளித்த இடத்தில் ஒரு தேவாலயம் கட்ட வேண்டுமென்று அறிவித்த அமலோற்பவி, “நான் எனது எல்லா அன்பையும், இரக்கத்தையும், பரிவையும், உதவியையும், பாதுகாவலையும் மக்களுக்கு அளிப்பேன் – என்று கூறினார்கள்.
தேவ அன்னை தமது தரிசனையை உறுதிசெய்யும்படியாக தல மேற்றிராணியார் கேட்ட அடையாளமான ரோஜா மலர்களை ஜூவான் தியாகோவின் மேலாடை – போர்வையில் ஒழுங்குபடுத்திய தேவதாய் அதில் தமது படம் அற்புதமாய் தோன்றச் செய்தார்கள். ரோஜா மலர்கள் பூக்க முடியாத காலத்தில் ரோஜா மலர்களை கேட்ட மேற்றிராணியார், ஜூவான் தியாகோ தனது மேல் போர்வையைத் திறந்து பூக்களை அவர்முன் அவிழ்க்க, அதில் தேவதாயின் அற்புத படம் காணப்படுவதைக் கண்டு முழங்காலிட்டார். ஆலயம் அங்கே எழுப்பப்பட, அந்தப் புதுமைப்படத்தின் மூலமாக குவாடலூப்பே மாதா பக்தி பரவி வளர்ந்தது. தேவதாயின் மன்றாட்டினால் புதுமைகளும், மனந்திரும்புதல்களும் மழையென அங்கே பொழியப்பட்டதை குவாடலூப்பே பேராலய Archive அறையிலுள்ள சான்று – சாட்சிப்பத்திரங்கள் பறைசாற்றுகின்றன.
தேவதாயின் காட்சிக்கு முன்பு அப்பகுதியிலுள்ள அஸ்டெக் பழங்குடி அஞ்ஞான மக்களை மனந்திருப்ப முயன்ற வேதபோதகக் குருக்களின் கடின உழைப்பிற்கு குறைவான விளைவே கிடைத்திருக்க மாதாவின் தரிசனைக்குப் பிறகு தேவமாதா பக்தியினாலும், புதுமை குவாடலூப்பே ! மாதா படத்தைச் சுற்றி நடந்த பக்தி முயற்சிகளாலும் மெக்சிகோவிலுள்ள அஞ்ஞான இந்தியர்கள் தங்களது கடவுள்களின் மீதான தேவதாயின் வல்லமையையும், வெற்றியையும் புரிந்து கொண்டார்கள். 1 கோடி அஞ்ஞானிகள் கத்தோலிக்கர்களாக ஞானஸ்நானம் பெற்றனர்.
இதன் காரணமாக அமெரிக்கா மனந்திரும்பியது. 20-நூற்றாண்டின் மத்தியில் 17 துறவற சபைகள் குவாடலூப்பே மாதாவின் பெயரைத் தாங்கியவைகளாக இருந்தது ஆக புராட்டஸ்டாண்ட் பதிதத்தினால் ஏற்பட்ட இழப்பை தேவதாய் தமது குவாடலூப்பே காட்சியின் மூலம் ஈடு செய்து, அஞ்ஞான இருளகற்றும் தேவ வரப்பிரசாதத்தை பொழிகிறார்கள்
Source: New feed