
1. விருந்தினரை முகம் மலர உபசரிக்கும் பண்பு
2. .அனைவரோடும் நட்புரீதியான உறவை உருவாக்கல்
3. பணிகளில் விவேகமான நகர்த்தல்கள்
3. உங்களது பலங்களையும் பலவீனங்களையும் அறிந்திருத்தல்
4. உங்கள் உடல் இயலாமைகளோடு பணி புரிய தயாராயிருத்தல்
5. பாராட்ட வேண்டியவர்களை முகத்துக்கு நேரே பாராட்டல்
6. மாற்றுக்கருத்திருப்பின் முகத்துக்கு நேரே சொல்லும் பண்பு
7. முன் வந்து உதவும் பண்பு
8. இரக்கம் நிறைந்த இதயம்
9. இருக்கும் இடத்தை கலகலப்பாக வைத்திருக்கும் நகைச்சுவைப் பண்பு
10. உங்களது நடிப்பு மற்றும் நாடகம் இயக்கும் திறன்
11. இளையவரோடு இறங்கிப் பழகும் இலாவகம்
12. நான் ஒர் அமலமரித்தியாகி என்று நீங்கள் சொல்லிக்கொள்வதில் பொறுப்புணர்வோடு கூடிய ஆனந்தம்
நீங்கள் ஒரேயொரு ஜீவனதாஸ் தான். மிகத்தனித்துவமானவர்தான். உங்களைப் போல ஒருவரும் இருந்ததும் இல்லை. இருக்கப் போதும் இல்லை.
உங்களோடு உறவாட தந்த நேரங்கிளுக்கெல்லாம் நன்றி தந்தையே..
இவை அனைத்தையும் உங்கள் முகத்துக்கு நேரே சொல்லியிருக்க வேண்டும்.
இந்தப் பதிவு எனக்காகவும் மற்றவர்களுக்காகவும்.
மற்றவர்களது உயரிய பண்புகளை அவர்கள் உயிரோடு இருக்கும் போதே அவர்கள் முகத்துக்கு நேரே சொல்லி பாராட்டும் பண்பை அதிகரியும் ஆண்டவரே!
Source: New feed