மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச விஜயம்

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று மதியம் மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

ஆயர் இல்லத்திற்கு விஜயம் செய்த சஜித் பிரேமதாச குழுவினர் மன்னார் மறைமாவட்ட ஆயர் இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடினார்.இக் கலந்துரையாடலில் குரு முதல்வர் அருட்பணி விக்டர் சோசை அடிகளார் மற்றும் அருட்தந்தையர்கள் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பில் மன்னார் மறை மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

Source: New feed