திருமறைக் கலாமன்றத்தால் வெளியிடப்படும்’கலைமுகம்’கலை இலக்கிய சமூக இதழின் 68 ஆவது இதழ்

திருமறைக் கலாமன்றத்தால் வெளியிடப்படும்’கலைமுகம்’கலை இலக்கிய சமூக இதழின் ஏப்பிரல்-செப்ரெம்பர் 2019 காலப்பகுதிக்குரிய 68 ஆவது இதழ் இந்த வார இறுதியில் வெளிவருகின்றது.உலகப் புகழ் பெற்ற ஓவியர் பிக்காசோவின் ஓவியமொன்றை முகப்பில் தாங்கி வெளிவரும் இந்த இதழில் வழமையான விடயங்களுடன் சிறப்பம்சமாக எழுத்தாளராக,கவிஞராக,சமூகப் போராளியாக அரைநூற்றாண்டுக்கு மேலாகச் செயற்பட்டு வருபவரும்,தேசிய கலை இலக்கியப் பேரவையின் முக்கிய செயற்பாட்டாளரும் ‘தாயகம்’ சஞ்சிகையின் பிரதம ஆசிரியருமான க.தணிகாசலம் அவர்களின் நேர்காணல் இடம்பெறுகின்றது

Source: New feed