சனசமூக, ஆலய நிர்வாகங்களில் பெண்களை இணைக்க கோரி நல்லூர் பிரதேச சபையில்தீர்மானம்!

சனசமூக நிலையங்கள் மற்றும் கோவில் நிர்வாகங்களில் பெண்களை இணைத்துக்கொள்வதனை கட்டாயமாக்க வேண்டும் என நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபையின் 46ஆவது மாதாந்த சபை அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதன் போது சபை உறுப்பினர் சி.கௌசலா , ” சனசமூக நிலையங்கள் மற்றும் கோவில் நிர்வாகங்களில் பெண்களை இணைத்துக்கொள்வதனை கட்டாயமாக்க வேண்டும்” என சபையில் பிரேரணையை முன் வைத்தார்.

அதனை சபை உறுப்பினர்கள் ஆதரித்ததை அடுத்து சபையில் அது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

Source: New feed