கேவலார் அன்னையின் 35வது ஆண்டு பெருவிழா சிறப்பாக நடைபெற்றது

புலம்பெயர் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து மருதமடு அன்னையின் திருநாளில் நம் நாட்டின் நிரந்தர அமைதிக்காகவும், எமக்காகவும் இறைத்தந்தையை வேண்டுதல் செய்யும் கேவலார் அன்னையின் 35வது ஆண்டு பெருவிழா சிறப்பாக நடைபெற்றது

13.08.2022 சனிக்கிழமைகாலை திருவிழாத் திருப்பலிக்கு
யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் அழைப்பை ஏற்று, இவ்வாண்டு முன்ஸ்ர் மறைமாவட்ட ஆயர் Bischof Dr.Felix Genn ஆண்டகை அவர்கள் கேவலார் அன்னையின் திருவிழாவிற்கு வருகை தந்து சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார்

தொடர்ந்து மாலை நற்கருணை வழிபாடும் அன்னையில் திருச்சுருப ஆசீருடன் நிறைவுபெற்றது