இம்மாதம் 18ம் தேதி “பத்து இலட்சம் சிறார் செபமாலை செபித்தல்” என்ற நிகழ்வில், பங்குத்தளங்கள், பாலர் பள்ளிகள், ஏனையப் பள்ளிகள், மற்றும், குடும்பங்கள் ஆகியவை இணையுமாறு, Aid to the Church in Need (ACN) எனப்படும், தேவையில் இருக்கும் திருஅவைகளுக்கு உதவும், உலகளாவிய பாப்பிறை அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
உலக மறைபரப்பு ஞாயிறாகிய இம்மாதம் 18ம் தேதி இந்த உலகளாவிய பக்தி முயற்சியை நடத்தவிருக்கும் அந்த அமைப்பு, உலகில் ஒற்றுமை மற்றும், அமைதியைக் கொணரச்செய்வதற்கு, இது உதவும் என்று கூறியுள்ளது.
இந்த உலகம் இதுவரை கண்டிராத அளவிற்கு, இவ்வாண்டில், நலவாழ்வு மற்றும், வாழ்வாதாரத்தில் நெருக்கடி நிலைகள் எதிர்கொள்ளப்படுகின்றன, இதனால், இவ்வாண்டு, உலக அளவில் ஒரே நேரத்தில் சிறார் இணைந்து செபிக்கும் செபமாலை மிகவும் முக்கியமானது எனவும், அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்த பக்தி முயற்சி குறித்து, உலகளாவிய சிறாருக்கு மடல் அனுப்பியுள்ள, Aid to the Church in Need அமைப்பின் தலைவர் கர்தினால் Mauro Piacenza அவர்கள், இப்போதைய துன்பம் நிறைந்த சூழல்களில், நாம் ஒன்றுசேர்ந்து பணியாற்றவேண்டும், மற்றும், ஒருவர் ஒருவருக்காக உதவவேண்டும் என்று கூறியுள்ளார்.
அதேநேரம், மிகப்பெரும் உதவி கடவுளிடமிருந்தே வருகின்றது என்பதையும் நாம் மறக்கக்கூடாது என்று கூறியுள்ள கர்தினால் Piacenza அவர்கள், இதனாலாயே, பத்து இலட்சம் சிறார் இணைந்து செபமாலை செபிக்கும் பக்தி முயற்சியை மேற்கொண்டு வருகிறோம் என்று கூறியுள்ளார்.
இந்த செபமாலை முயற்சியை, அக்டோபர் 18 ஞாயிறன்றோ, அல்லது, அதைத் தொடரும், அக்டோபர் 19ம் தேதி திங்களன்றோ, பள்ளிகளிலும், பாலர் பள்ளிகளிலும் சிறாரோடு இணைந்து செபிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள கர்தினால் Piacenza அவர்கள், பத்து இலட்சம் சிறாரின் செபம், இந்த உலகை மாற்றமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Source: New feed