தவக்கால சிந்தனை “தியானிப்போம் இதன்படி வாழ்வை அமைப்போம்”.
இது வெறும் 40 நாட்கள் மட்டும், நல்ல கிறிஸ்தவர்களாக வாழ நம்மை அழைக்கும் காலம் அல்ல. வருடத்தின் 365 நாட்களும் நல்ல கிறிஸ்தவர்களாக ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு மிகவும் பிரியமான பிள்ளைகளாக வாழ்வதற்கு நம்மை நாமே தயாரிக்கும் காலம்.
அதற்குத் தேவையான முயற்சியும், பயிற்சியும் எடுக்கும் காலம்தான் தவக்காலம். அதே போல் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகள் தவ காலங்களில் மட்டுமல்ல எப்போதும் தியானிக்க வேண்டும் தவக்காலங்களில் இன்னும் அதிகமாக ஆழமாக தியானிக்கப்பட வேண்டும்….
40 நாட்கள் நான் நல்லவனாக, நல்லவளாக வாழ்வேன், பயனற்ற வார்த்தைகள், தீய பேச்சுக்கள் பேச மாட்டேன், தவம் செய்வேன், பரிகாரம் செய்வேன், அதிகமாக ஒறுத்தல் முயற்சிகள் செய்வேன்.
ஆண்களில் பலர் கூறுவார்கள் :-புகைக்க மாட்டேன் , 40 நாட்கள் குடிக்க மாட்டேன்,
பெண்களில் பலர் கூறுவார்கள்:- TV சீரியல்கள் பார்க்கமாட்டேன், பொதுவாக தொலைக்காட்சியில் சினிமா பாடல்கள் பார்க்க மாட்டேன், 40 நாட்கள் மாமிசம் சாப்பிடாமல் இருப்பது, புலன்களை அடக்குவது, சண்டைச் சச்சரவுகள் செய்யாமல் இருப்பது என்று இருந்துவிட்டு,
உயிர்ப்பு பெருவிழாவிற்கு அப்புறம் முன்னையதை விட அதிகமாக அனைத்து காரியங்களையும் செய்வேன் (நல்லா டிவி சீரியல்(???) நல்லா சினிமா(?) நல்ல சினிமா பாடல்களுக்கு(???) தவக்காலத்துக்குப் பின் விதிவிலக்கு கொடுத்துவிடலாம், மற்ற கெட்ட பழக்கங்கள் நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டும்) என்றால் இந்த தவக்காலமே நமக்கு தேவையில்லை
மாற்றங்கள் வேண்டும்,முன்னேற்றம் வேண்டும், இறைவனை நோக்கி தவக்காலத்தில் எடுத்த நல்ல முடிவுகள் பின்பற்றப் பட வேண்டும். ஆண்டவரை நோக்கி ஒரு படியாவது முன்னெடுத்து வைக்கவேண்டும். எல்லாவற்றையும் காற்றில் பறக்க விடக்கூடாது, எல்லா நாளுமே நாம் நன்றாக இருந்துவிட்டால் தவக்காலங்களில் கஷ்டங்கள் இருக்காது.
நாம் இன்னும் பலவிதமான POLLUTION( பாவங்கள்) களை மனதிற்குள் வைத்துக்கொண்டு, அதோடுதான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
இதை ஒவ்வொன்றாக அடையாளம் கண்டு அவைகளை வெளியேற்ற வேண்டும், உள்ளத்தில் இருக்கும் நாற்றங்கள் வெளியேற வேண்டும், உள்ளத்தை நன்றாக கொத்தி பாத்திகட்டி மணம் வீசும் மலர் உள்ள செடிகளை விதைக்க வேண்டும். அவைகள் வளர்ந்து மணம் வீசும் மலர்கள் அங்கே பூக்கும். நம் ஒவ்வொருவர் உள்ளமும் குழந்தைகள் உள்ளமாக மாறினால் குழந்தைகள் சிரிப்பைகேட்டு பூக்கள் பூப்பது போல் நம் உள்ளத்திலும் ஒவ்வொரு முறையும் பூக்கள் பூத்துக்கொண்டே இருக்கும்.
இதற்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகள் நமக்கு உதவும். நம் பாவங்களுக்காக சிலுவையில் சுமந்து தன் கடைசி சொட்டு இரத்தம் வரை சிந்தி நம்மை மீட்டு இரட்சித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காய் நாமம் நம் பாவங்களை முழுமையாக விட்டு விடுவோம்.
திருமுழுக்கு வழிபாட்டில் நம்மிடம் குருவானவரால் கேட்கப்படும் கேள்வியை இப்போது நாம் இயேசு ஆண்டவர் நம்மை பார்த்து இருக்கின்றார்.
“பாசாசையும் அவன் கிரியைகளையும், அவன் ஆரவாரங்களையும் முழு மனதோடு விட்டு விடுகிறாயா”?
ஆண்டவருக்கு நாம் என்ன பதில் சொல்ல இருக்கின்றோம்..?
இயேசு ஆண்டவரின் உயிருள்ள வார்த்தையான “என்னைப் பின் செல்” என்ற வார்த்தைக்கு உடனே கீழ்ப்படிந்து எதைப்பற்றியும் யோசிக்காமல் தந்தையையும், வலைகளையும் விட்டு பின்சென்ற புனித சந்தியாகப்பர் (பெரிய யாக்கோபு) புனித அருளப்பரைப் போல் நாமும் இந்த உலககவர்ச்சி, மாயைகளை யோசிக்காமல் தூக்கி எறிந்து விட்டு நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை முழு உள்ளத்தோடும், முழு ஆன்மாவோடும், முழு வலிமையோடும், பின் செல்ல தயாராக இருக்கின்றோமா?,,, சிந்திப்போம்,,,,,
அதற்காக இந்தத் தவக்காலத்தில் நம்மை தயாரிப்போம், பயிற்சிகள் எடுப்போம், முயற்சிகள் செய்வோம், அதை செயல்படுத்துவோம், 365 நாட்களும் நல்ல கிறிஸ்தவர்களாக வாழ்வோம்.
Source: New feed