
சமூகத்தொடர்புப் பணிகளை ஆற்றுவோர் எப்போதும் உண்மையைத் தேடவேண்டும், வெறுப்பைத்தூண்டும் பேச்சுகளுக்கு எதிராய்ச் செயல்படவேண்டும், குரலற்றவர்களுக்கு குரல்களாகச் செயல்படவேண்டும் மற்றும், தனிப்பட்ட கருத்துக்களைப் பரப்புவதைத் தவிர்க்கவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று கூறியுள்ளார்.சமூகத்தொடர்பு திருப்பீடத் துறை நடத்திய ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், மற்றும், அத்துறையில் பணியாற்றுவோர் என ஏறத்தாழ 200 பேரை, வத்திக்கானின் கிளமெந்தினா அறையில், நவம்பர் 12, இச்சனிக்கிழமையன்று சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமூகத்தொடர்புப் பணியாளர்களின் கடமைகள் குறித்து எடுத்துரைத்தார்.
இச்சமூகத்தொடர்பாளர்களுக்கென்று தான் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த உரையை வழங்காமல் அந்நேரத்தில் தன் உள்ளத்தில் எழுந்த சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, புறக்கணிக்கப்பட்டோருக்காக குரல்கொடுத்து, அவர்களுக்கு அருகிலிருக்குமாறு ஊக்கப்படுத்தினார், திருத்தந்தை.
பொதுவாக நாம் புறக்கணிக்கின்ற காரியங்கள் மீது கவனம் செலுத்தப்பட பணியாற்றுமாறும், சமூகத்தொடர்பாளர்களின் பணியில் கடவுளின் குரல் எதிரொலிக்கப்படவேண்டும் என்றும் கூறியத் திருத்தந்தை, சமூகத்தொடர்பின் மூன்று மூலைக்கற்கள் குறித்து எடுத்துரைத்தார்
Source: New feed