மன்னார் நகர நுழைவாயிலில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் 300 தொடக்கம் 500 ஆண்டுகள் முற்பட்டவை என்று காபன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதிரிகளின் அறிக்கையில் 1499 தொடக்கம் 1719ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் புதைக்கப்பட்ட மனித உடலங்களின் எச்சங்களே இவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட 335 எலும்புக்கூடுகளில், தெரிவு செய்யப்பட்ட 6 எலும்பக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு, புளோரிடாவில் உள்ள ஆய்வகத்தில் கார்பன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வு முடிவுகள் அதிகாரபூர்வமாக நேற்று முன்தினம் மன்னார் நீதிவான் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இன்று வெளியாகியுள்ளது.
மன்னாரில் போர்த்துக்கேயர் காலத்தில் கிறீஸ்தவ மதத்துக்கு மாறிய தமிழர்களை சங்கிலி மன்னன் நல்லுாரில் இருந்து படைகளை அனுப்பி கொன்று குவித்தான் என்பது வரலாறு….
மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் 1499 தொடக்கம் 1719ஆம் ஆண்டுவரையானது என்று கார்பன் அறிக்கை சொல்லி இருக்கிறது.. அக்காலப் பகுதியில்தான் -1544 ஆம் ஆண்டு கிறிஸ்தவத்தை தழுவிய 600 – 700 பேரை சங்கிலி மன்னன் படுகொலை செய்திருந்தான்
Source: New feed
Post Views: 1,080
Tags:
‘பிக் பாஸ்’Other Articles
Next
March 7, 2019
மார்ச் 8 : நற்செய்தி வாசகம்
Previous
March 7, 2019