கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூர்ந்து மன்னாரிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வவுனியாவை வந்தடைந்தனர்.
கிறிஸ்தவர்கள் தற்பொழுது கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூர்ந்துவரும் தவக்காலத்தை முன்னிட்டு வவுனியா கோமரசன்குளத்தில் அமைந்துள்ள கல்வாரியில் நாளை வெள்ளிக்கிழமை (29.03.2019) நடைபெற இருக்கும் சிலுவைப் பாதை மற்றும் திருப்பலி வழிபாட்டில் கலந்து கொள்ளும்முகமாக மன்னார் பகுதியிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக இன்று (28.03.2019) மாலை 5 மணியளவில் வவுனியாவை வந்தடைந்தனர்.
இவர்கள் வந்ந வழிகளில் – வவுனியா பிரதேச செயலகம் உட்பட பல அரச மற்றும் அரசார்பற்ற நிறுவனங்கள் தாக சாந்திக்கான ஏற்பாடுகளை செய்யப்பட்டது.
வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலய பங்கு சபை, இளைஞர் ஒன்றியம், இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயம் பங்கு மக்கள் என இணைந்து பக்தர்களுக்காக தங்குமிடவசதி, இரவு உணவுகள் என்பனவற்றை வழங்கி இருந்தனர்.
Source: New feed