மறைக்கல்வி ஆசிரியர் திருப்பணிப் பொறுப்பை வழங்கினார் திருத்தந்தை

உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 5 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு மறைக்கல்வி ஆசிரியர் திருப்பணிப் பொறுப்பை ஜனவரி 23, இறைவார்த்தை ஞாயிறன்று ஒப்படைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த ஆண்டு மே மாதம் 11ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  “Antiquum ministerium” அதாவது, “தொன்றுதொட்டு விளங்கும் திருப்பணி” என்ற தலைப்பில், வெளியிட்ட திருத்தூது மடல் வழியாக உருவாக்கிய மறைக்கல்வி ஆசிரியர் திருப்பணியை, இஞ்ஞாயிறன்று உலகின் 8 பேரிடம் ஒப்படைத்தார்.

இறைவார்த்தை ஞாயிறன்று இதனை வழங்கி மறையுரையாற்றிய திருத்தந்தை, “கடவுள் நம்மோடு பேசிய வார்த்தையிலிருந்து  அனைத்தும் துவங்கியது என்பதால், இயேசுவில் நம் பார்வையைப் பதித்து, அவரின் வார்த்தைகளை அரவணைத்துக் கொள்வோம்” என அழைப்பு விடுத்தார்.

Source: New feed